ராசிபுரம் ஓங்காளியம்மன் கோவில் தீ மிதி விழா
ADDED :2777 days ago
ராசிபுரம்: குருசாமிபாளையம் ஓங்காளியம்மன் கோவிலில், இன்று தீ மிதி விழா நடக்கவுள்ளது. ராசிபுரம் அருகே, குருசாமிபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா, பிப்., 23ல் துவங்கியது. 15 நாட்கள் நடைபெறும் விழாவில், இன்று காலை, 5:00 மணிக்கு குண்டம் தீ மிதித்தல், பொங்கல் வைத்தல், மாலை, 5:00 மணிக்கு அலகு குத்தி வருதல் நடக்கிறது. தொடர்ந்து, வண்டி வேடிக்கை நடைபெறுகிறது. வரும், 10 மாலை, 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கவுள்ளது.