உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொங்கணகிரி கந்த பெருமான் கோவிலில் பாலாலய சிறப்பு பூஜை

கொங்கணகிரி கந்த பெருமான் கோவிலில் பாலாலய சிறப்பு பூஜை

திருப்பூர்: திருப்பூர், கொங்கணகிரி ஸ்ரீ கந்த பெருமான் கோவில் திருப்பணிக்காக, பாலாலய பூஜைகள் நடந்தன.திருப்பூரில், பிரசித்தி பெற்ற, கொங்கணகிரி ஸ்ரீ கந்த பெருமான் கோவில் உள்ளது. கோவிலில், புதிதாக ஐந்து நிலை ராஜ கோபுரம் அமைக்கப்பட்டு, பெரும்பாலான திருப்பணி நிறைவுபெற்றுள்ளது.

ராஜகோபுரம் அமைக்கும் பணி, தற்போது நடைபெற்று வருகிறது.மேலும், சுற்றுப்புற பிரகாரத்தில் கல் தளம், திருமதில், பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதி, கிரிவலப்பாதை, மலை முழுவதும் மரக்கன்றுகள், பக்தர்களுக்கு இருக்கை, பூங்கா, குடிநீர் வசதி ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. தொடர்ந்து மூலவர், பெருமாள், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளின் கோபுரங்கள்,கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியன புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, நேற்று காலை,7:30 மணிக்கு, சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்களை முழங்க, ேஹாம பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மூலாலயகோபுரம்மற்றும் மூலவ மூர்த்திகள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, துணை தலைவர் ராஜாமணி, பொது செயலாளர் கணேஷ், பொருளாளர் துரை மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !