தேவகோட்டையில் சந்தனக்கூடு விழா
ADDED :2775 days ago
தேவகோட்டை:தேவகோட்டை ஒத்தக்கடை பகுதியில் உள்ள மகான் நாகூர் ஹஸ்ரத் சாகுல் ஹமீது ஒலியுல்லா தர்காவில் 86ம் ஆண்டு சந்தனக்கூடுவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.18 நாட்களும் சிறப்பு மவ்லுாது ஓதி ஹத்தம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு சந்தனக்கூடு ஊர்வலம் முக்கிய வீதிகளில் வந்தது. நேற்று மாலை பகல் கூடு தேவகோட்டை ஆற்றங்கரை சென்று தர்காவை வந்தடைந்தது.