உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பங்குனி உத்திரவிழா மார்ச் 24ல் கொடியேற்றம்

பழநி பங்குனி உத்திரவிழா மார்ச் 24ல் கொடியேற்றம்

பழநி: பழநி முருகன்கோயிலில் பங்குனி உத்திரவிழா மார்ச் 24ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்.,2 வரை நடக்கிறது. கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு பெயர் பெற்ற, பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு,பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சுவாமிகள் திருஆவினன்குடி கோயிலிலுக்கு கொண்டு வரப்படும்.மார்ச் 24ல் திருஆவினன்குடிகோயிலில் காலையில் கொடியேற்றமும், மலைக்கோயிலில் உச்சிக்காலத்தில் காப்புக்கட்டுதலும் நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறாம்நாள், (மார்ச் 29) இரவு திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டம், ஏழாம்நாள் (மார்ச் 30) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாலையில் கிரிவீதியில் திருத்தேரோட்டம் நடைபெறும். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !