தர்மபுரி தட்சணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :2773 days ago
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், மாசி மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சாம்பல் பூசணியில், தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை, 6:00 மணிக்கு, காலபைரவருக்கு, அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேரயாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தது. 64 வகையான அபி?ஷங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் கோவிலை சுற்றி மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். நேற்று நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1008 கிலோ மிளகாய் வற்றல் யாக பூஜை நடந்தது. இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.