ஓங்காளியம்மன் கோவில் விழா: தீ மிதித்து நேர்த்திக் கடன்
ADDED :2773 days ago
ராசிபுரம்: ஓங்காளியம்மன் கோவில் விழாவில், பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். ராசிபுரம் அருகே, குருசாமிபாளையம் ஓங்காளியம்மன் கோவில் திருவிழா, பிப்., 23ல் துவங்கியது. நேற்று காலை, 5:00 மணிக்கு தீ மிதித்தல் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், அக்னி குண்டம் இறங்கி, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து, பொங்கல் வைத்தல் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, 10க்கும் மேற்பட்ட பக்தர்கள், அலகு குத்தி கோவிலை வலம் வந்தனர். இன்று மாலை, 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடைகிறது.