உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதூர் ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றம்

புதூர் ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றம்

திருப்புவனம்: திருப்புவனம் புதூர் ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். பத்து நாட்களும் சுற்று வட்டார கிராம மக்கள்­பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு 9:30 ம ணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரத்திற்கு விசேஷ பூஜைகள் நடந்தன. கொடியேற்ற வைபவத்தை தெய்வசிகாமணிபட்டர் தலைமையிலான சிவாச்சார்யார்கள் நடத்தினர். 16ம் தேதிவெள்ளிகிழமை பொங்கல் விழா நடை பெறுகிறது. தினசரி கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் நடை பெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !