உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களிடம் ‘ரத்தம்‘ கேட்கும் காளி கோயில்

பக்தர்களிடம் ‘ரத்தம்‘ கேட்கும் காளி கோயில்

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரம் விதுரா கிராமத்தில் உள்ள தேவியோடு காளி கோயிலில் நடைபெற உள்ள பாரம்பரிய சடங்கின் ஒருபகுதியாக, காளி சிலைக்கு ரத்தத்தால் ஆன குளியல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக, கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், கோயில் நிர்வாகம் சார்பில், ரத்தம் தானமாக பெறப்படுகிறது. இதற்கான நோட்டீசும் ஆங்காங்கே ஓட்டப்பட்டுள்ளது. பக்தர்களிடம் இருந்து ரத்தத்தை பெறுவதற்காக, கோயிலில், பயிற்சி பெற்ற அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கோயில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், இந்நிகழ்வு, கேரளா மீதான நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !