உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்ப பல்லக்கில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் உலா

புஷ்ப பல்லக்கில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் உலா

காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் நிறைவு பெற்று, எட்டாம் நாளான நேற்று முன்தினம் இரவு, அம்மன் புஷ்ப பல்லக்கில் ராஜ வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம், பிப்., 20ல் துவங்கி, கடந்த, 3ம் தேதியுடன் நிறைவு பெற்றது. பிரம்மோற்சவம் முடிந்து, எட்டாம் நாள் நடக்கும், புஷ்ப பல்லக்கு உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடை பெற்றது. புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !