பாலேஸ்வரர் கோவிலில் சோமவார பூஜை
ADDED :2760 days ago
கண்டாச்சிபுரம்: கெடார் அடுத்த சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜைகள் நடந்தது. கெடார் அடுத்த சிறுவாலை கிராமத்தில் உள்ள பாலேஸ்வரர் கோவிலில் திங்கள் கிழமைதோறும் நடைபெற்று வரும் உச்சிகால பூஜைகள் நேற்று நடந்தது. காலை 11:00 மணிக்கு மூலவர் பாலேஸ்வரருக்கு 1008 லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனையும், சிறப்பு அபிஷேகங்களும் நடந்தன. பின்னர் பக்தர்கள் கலந்து கொண்ட வாழைப்பூ கலச பூஜைகள் நடந்தது. தொடர்ந்து உச்சிகாலபூஜை நடந்தது. இதில், சிறுவாலை, விழுப்புரம், சூரப்பட்டு, கெடார் ஆகிய பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுசுவாமியை தரிசனம் செய்தனர்.