உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை வழிபாடு

கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை வழிபாடு

செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் மாதாந்திர ஸ்ரீராம பஜனை நடந்தது. செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர், கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள்கோவிலில் மாசி மாத ஸ்ரீராம பஜனை சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம்,தீபாராதனை நடந்தது. ஸ்ரீராம பஜனையில் ராமமூர்த்தி திருமால் வணக்கம் செய்தார். அறக்கட்டளை நிர்வாகி பாரதிராஜா முன்னிலைவகித்தார். ஜெயராமன் தலைமை தாங்கினார். ஜனார்த்தனன் சிறப்புரை நிகழ்த்தினார். நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் வில்லுப்பாட்டு நடந்தது. விழா குழுவினர் எட்டியப்பிள்ளை, சாமிகண்ணு, பெருமாள், அருணகிரி, அப்புபிள்ளை, கிருஷ்ணவேணி, வேணுகோபால், சுதர்சனம், ராமசாமிஉபயதாரர்கள் தயாநிதி, அழகரசி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜானகிராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !