மாசி மாத ஆன்மிக பெருவிழா
ADDED :2805 days ago
நாமக்கல்: நாமக்கல், ஆன்மிக வேள்வி அறக்கட்டளை சார்பில், மாசி மாத ஆன்மிக பெருவிழா நடந்தது. தென்மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். விழாவில், ’இறைவன் எங்கே இருக்கிறான்’ என்ற தலைப்பில், கவிஞர் கங்கை மணிமாறன் பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவியரின் பரதநாட்டியம் நடந்தது. தமிழ்ச்சங்க தலைவர் குழந்தைவேல், டிரினிடி கல்லூரி தலைவர் செங்கோடன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.