உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பிள்ளைகளால் பெருமை

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பிள்ளைகளால் பெருமை

நன்றி மறவாத மனம் படைத்த மகர ராசி அன்பர்களே!

இம்மாதம் 11-ம் இடத்தில் இருக்கும் குரு, 3-ம் இடத்தில் உள்ள சூரியன்,சுக்கிரன் ஆகியோரின் பக்க பலத்தோடு பல்வேறு நன்மை வழங்க காத்திருக்கின்றனர். குரு பகவான் ஏப்.10-ந் தேதி வரை 11-ம் இடத்தில் இருப்பது சிறப்பானது. அதன் பின் அவர் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு செல்கிறார். அப்போது அவரால் நற்பலன் கொடுக்க முடியாது. எடுத்த முயற்சியில் பின்னடைவு உண்டாகாது. விரைவாக எதையும் செய்து முடித்தால் நன்மை பெறலாம். பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும்.

சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன்-, மனைவி இடையே அன்னியோன்ய சூழ்நிலை இருக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மார்ச் 26- க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர் மத்தியில் சுமூக நிலை ஏற்படும். ஏப். 9,10-ம் தேதிகளில் பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். மார்ச்20,21ம் தேதிகளில் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். எனவே அப்போது சற்று விலகியிருக்கவும். ஆனால் ஏப்ரல்4,5,6-ம் தேதிகளில் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை தேடி தருவர்.

பெண்கள் வாழ்வில் குதூகலம் அடைவர். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக செயல்படுவர். மார்ச் 18,19-ம் தேதிகளில் புத்தாடை, நகைகள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். மார்ச் 26,27ம் தேதிகளில் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் ஆதரவுடன் இருப்பர். ஏப்.9க்கு பிறகு குருபகவானால் மனசஞ்சலத்திற்கு ஆளாகலாம். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

தொழில், வியாபாரம் நல்ல வளர்ச்சி பெறும். லாபம் சிறப்பாக இருக்கும். சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய தொழில் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழில் தொடங்கலாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும். தொழில் ரீதியான பயணம் மேற்கொண்டவர்கள் ஆதாயமுடன் திரும்புவர். சிலர் தங்கள் வணிகத்தை வெளிநாடு வரை விரிவுபடுத்தலாம்.
புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பகைவர்களால் இடையூறு வரலாம். அரசிடம் இருந்து எதிர்பார்த்த சலுகை கிடைக்காது. வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மார்ச் 15,16,17, ஏப்ரல்7,8,11,12,13-ம் தேதிகளில் சந்திரனால் சிறுதடைகள் வரலாம். மார்ச் 24,25-ம் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். பணியாளர்களுக்கு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். ஆனால் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். ஏப்.2,3-ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

கலைஞர்கள் உற்சாகமான பலன் பெறுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூக நலசேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்காது.

மாணவர்கள் சுமாரான நிலையில் படிப்பர். தொடர்ந்து சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. இருப்பினும் குருவால், ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்க பெறுவர்.

போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். ஏப்.9-ம் தேதிக்கு பிறகு சக மாணவர்களிடம் விழிப்புடன் பழகவும்.  விவசாயிகள் பொருளாதார வளம் காண்பர். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் பெருகும். பழங்கள், கிழங்கு வகைகளில் மகசூல் அதிகம் கிடைக்கும்.

* நல்ல நாள்: மார்ச் 18, 19, 24, 25, 26, 27, ஏப். 2, 3, 4, 5, 6, 9, 10
* கவன நாள்: -மார்ச் 28, 29 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்- 2, 3  நிறம்-: மஞ்சள், சிவப்பு

பரிகாரம்:
* முருகன் கோயிலில் நெய் விளக்கு
* பிரதோஷத்தன்று நந்திக்கு  அபிேஷகம்
*  ராகு காலத்தில் நாகதேவதை வழிபாடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !