உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமகிரிப்பேட்டை பொன்காளியம்மன் கோவிலில் தீ மிதி விழா

நாமகிரிப்பேட்டை பொன்காளியம்மன் கோவிலில் தீ மிதி விழா

நாமகிரிப்பேட்டை: ஆர்.புதுப்பட்டி ஆர்.பி. காட்டூர், பொன்காளியம்மன் கோவிலில் நேற்று தீ மிதி விழா நடந்தது.

நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆர்.புதுப்பட்டி, ஆர்.பி.காட்டூரில் பிரசித்தி பெற்ற பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, மாசிமாதம் பொங்கல் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 6ல் தொடங்கியது. நேற்று(மார்.,14) காலை, 7:00 மணிக்கு தீ மிதிவிழா நடக்கிறது. பகல், 1:00 மணிக்கு பொங்கல் வைத்தல், தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !