உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி செல்ல அனுமதி மறுப்பு: ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்

சதுரகிரி செல்ல அனுமதி மறுப்பு: ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்

வத்திராயிருப்பு: மழையால், சதுரகிரி மலை செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் ,ஏமாற்றத்துடன் திரும்பினர். அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டிற்கு, சதுரகிரி மலைக்கு செல்ல, பக்தர்கள்  அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக, பிரதோஷ தினத்தன்று மலைப்பாதை திறக்கப்பட்டு, அமாவாசை அல்லது பவுர்ணமியின்  மறுநாள் மூடப்படும்.

ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் துவங்குவதையொட்டி, நான்கு நாட்கள் திறக்கப்படும். சில மாதங்களில் பிரதோஷம், அதற்கு மறுநாள் வரவேண்டிய சிவராத்திரியும் ஒரே நாட்களில் வரும். இதுபோன்ற சமயத்தில், மூன்று நாட்கள்   திறக்கப்படும். நேற்று பிரதோஷம் என்பதால், மலைப்பாதை திறக்கப்பட்டிருக்கும் எனக்கருதி ,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். மலையில், சாரல், அவ்வப்போது கனமழை  பெய்து வருவதால், நேற்று பக்தர்களை அனுமதிக்கவில்லை.  மழை நின்றால் அனுமதிக்கலாம் என்ற நம்பிக்கையில் ஏராளமான பக்தர்கள், அதிகாலை முதல் அடிவாரத்தில் காத்திருந்தனர்.  மழை நிற்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !