கயிலாயநாதர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :2768 days ago
வழுதாவூர்: வழுதாவூர் கயிலாயநாதர் தியான கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. வழுதாவூர் மேட்டுவெளி பகுதியில் உள்ள ஆதி கயிலாயநாதர் தியான கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து, மண்டல பூஜை வழிபாடு நிறைவு விழா நடந்தது. இதனையொட்டி, கடந்த 13ம் தேதி காலை 8:00 மணிக்கு சிவஞான கொடியேற்றுதல், காலை 8:30 மணிக்கு திருவிளக்கு பூஜை, புனித நீர், மூத்த பிள்ளையார் வழிபாடு, திருமாள் வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு ஆதி கயிலாயநாத சுவாமிக்கு முத்தமிழால் வேள்வி, மலர்போற்றி, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு ஆதி கயிலாயநாதர் சுவாமிக்கு, பிரதோஷ வழிபாடு நடந்தது.