உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி பிரம்மோற்சவ விழா பூத வாகனத்தில் தீர்த்தீஸ்வரர்

பங்குனி பிரம்மோற்சவ விழா பூத வாகனத்தில் தீர்த்தீஸ்வரர்

திருவள்ளூர்:திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, உற்சவர் பூத வாகனத்தில் எழுந்தருளினார். திருவள்ளூர், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை, மாலை, இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி வலம் வருகிறார். விழாவின், 4வது நாளான, நேற்று காலை, உற்சவர் சிவபெருமான், பூத வாகனத்தில் எழுந்தருளினார். இரவு, அதிகார நந்தி சேவை நடந்தது. இன்று காலை, நாக வாகனமும், வரும் 19ம் தேதி ரத உற்சவமும் நடைபெறுகிறது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !