உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் யுகாதி விழா: சேலத்தில் இருந்து 7 டன் பூக்கள்

திருமலையில் யுகாதி விழா: சேலத்தில் இருந்து 7 டன் பூக்கள்

சேலம்: திருமலையில் நடக்கும் விழாவுக்கு, சேலத்தில் இருந்து, 7 டன் பூ மாலைகள், லாரிகளில் அனுப்பப்பட்டன. யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு, திருப்பதி திருமலையில், நாளை கொண்டாடப்படுகிறது.

இதற்காக, சேலம், திருமலை திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், பூத்தொடுக்கும் நிகழ்ச்சி, கொண்டலாம்பட்டியில் நேற்று நடந்தது.சம்பங்கி, சாமந்தி, ரோஜா உட்பட, 2 டன் வாசனை பூக்களை, 300க்கும் மேற்பட்ட பெண்கள், மாலையாக தொடுத்தனர். அவை, லாரி மூலம், திருமலைக்கு அனுப்பப்பட்டது. ஏற்பாடுகளை, டிரஸ்டி பாலசுப்ரமணி செய்திருந்தார்.சேலம், கொங்கணாபுரத்தைச் சேர்ந்த திருமலை திருப்பதி ஸ்ரீமன்நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில், ராசிபுரம், வாசவி மஹாலில், ஏராளமானோர் மலர் தொடுத்தனர். 5 டன் எடையுள்ள மாலைகள், திருமலைக்கு எடுத்து செல்லப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !