உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனித் திருவிழா: 29ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனித் திருவிழா: 29ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன்கோயில் பங்குனித்திருவிழா வரும் 29 தேதி கொடியேற்றத்துடனும் துவங்குகிறது. மார்ச் 30 முதல், ஏப். 4ஆம்தேதி வரை தினமும் இரவு சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம்,பூத வாகனங்களில் அம்மன் வீதி உலா வருவார். ஏழாம் நாளான ஏப்.5ல் பொங்கல் வைபவம் நடைபெறும்.

விழாவில்,ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் முன் பொங்கல் வைத்துவழிபடுவர். ஏப். 6ல் அம்மனின் மின்ரத ஊர்வலம் நடைபெறும். ஒன்பதாம் நாளான, ஏப்.7 அன்று காலையில் இருந்துஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், கரும்பு தொட்டில் சுமத்தல்,மாவிளக்கு எடுத்தல் உட்பட பல்வேறு நேர்த்தி செலுத்துவர். அன்றுமாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவமும், இரவு 10:00 மணிக்கு அம்மன்புஷ்ப பல்லக்கில் எழுந்தருளலும் நடக்கிறது.  பத்தாம் நாளான ஏப்.8அன்று இரவு 8:00 மணிக்கு தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவுபெறும்.  இத்திருவிழாவையொட்டி, சிவகங்கை, பரமக்குடி,இளையான்குடி, மானாமதுரை, மதுரை, காரைக்குடி, கடலாடி, உட்படபல ஊர்களில் இருந்து போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள்இயக்கப்பட உள்ளன.  பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன்செட்டியார் தலைமையில், ஏற்பாடுகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !