வேம்புலி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்
ADDED :2776 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர் வேம்புலி அம்மன் கோவிலில் வசந்த நவராத்திரி முதலாம் ஆண்டு உற்சவம், நாளை துவங்கி, 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவள்ளூர் வேம்புலி அம்மன் கோவிலில், வசந்த நவராத்திரி முதலாம் ஆண்டு உற்சவம் நாளை துவங்குகிறது. தினமும் காலை, அம்மனுக்கு அபிஷேகமும், இரவு, 7:00 மகா தீபாராதனையும் நடைபெறும். தொடர்ந்து ஒன்பது நாட்களும், அம்மன், பல்வேறு அலங்காரத்தில், இரவு, 7:00 மணிக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.வரும், 26ம் தேதி வரை இந்த உற்சவம் நடைபெறும். 27ல், விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது.
நிகழ்ச்சி விபரம்
நாள் வாகனம்
நாளை சிம்ம வாகனம்
19 அன்ன வாகனம்
20 கிளி வாகனம்
21 நாக வாகனம்
22 ஆள்மேல் பல்லக்கு
23 ஆட்டுகிடா வாகனம்
24 திருத்தேர்
25 குதிரை வாகனம்
26 புஷ்ப பல்லக்கு