கீதை படிப்பதில் கஷ்டமா!
ADDED :2802 days ago
பகவத் கீதையை படிக்க முடியவில்லையே; படித்தாலும் புரியவில்லையே என நினைப்பவருக்கு, ஏற்ற ஸ்லோகம் இது. “மமை வாம்ஸோ ஜீவலோக ஜீவபூத ஸனாதனா‘ என்பதே அந்த ஸ்லோகம். “நீங்கள் அனைவரும் என்னை (பகவான் கிருஷ்ணரை) தொடர வேண்டும். எனது அன்பு தெய்வீகமானதும், புனிதமானதும் ஆகும்” என்பது இதன் பொருள். இதன்படியே நாம் அன்பு வழியில் வாழ்வு நடத்தினால் மனத்தூய்மை உள்ளவர்களாக மாறுவோம். தூய்மை இருக்குமிடத்தில் தெய்வீகம் இருக்கும். அப்போது எல்லா உயிர்களும் கடவுள் வடிவாகவே தெரியும். அந்த நிலையில் நாம் கீதையை முழுமையாக படித்த பலன் பெற்றவராகி விடுவோம்.