ஸ்ரீவி., பெரியமாரியம்மன் கோயில் தேரோட்டம்
ADDED :2829 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்;ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன்கோயில் பூக்குழிவிழாவை முன்னிட்டு நேற்று காலை தேரோட்டம் நடந்தது.பூக்குழிவிழாவின் கடைசி நாளான நேற்று காலை 11:00 மணிக்கு தேரில் எழுந்தருளிய பெரியமாரியம்மனுக்கு, கோயில் அர்ச்சகர் ஹரிஹரன் சிறப்பு பூஜைகள் செய்தார்.
பின்னர் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். கோயில் வீதிகளில் வலம் வந்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் போன்ற நேர்த்திகடன் பக்தர்கள் செலுத்தினர். விழாவில் அறநிலையத்துறை உதவிஆணையர் ஹரிஹரன், செயல்அலுவலர் சுந்தரராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். டவுன் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.