புரசைவாக்கம் துர்காளம்மன் கோவில் தீமிதி விழா
ADDED :2781 days ago
புரசைவாக்கம்: புரசைவாக்கம், தேவி துர்காளம்மன் கோவிலில், நேற்று அதிகாலை நடந்த தீமிதி திருவிழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர். புரசைவாக்கம், வடமலை பிள்ளை தெருவில், தேவி துர்காளம்மன் கோவில் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு, சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், வந்து செல்கின்றனர். இக்கோவிலின், 42ம் ஆண்டு, தீமிதி திருவிழா, நேற்று அதிகாலை நடந்தது. இதையொட்டி, 15ம் தேதி மாலை, அம்மனுக்கு அபிஷேகமும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. 16ல், அம்மனுக்கு சந்தனகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று அதிகாலை, 4:00 மணிஅளவில், தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீயில் இறங்கி, அவர்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.