உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெலுங்கு வருட பிறப்பு : கோவில்களில் சிறப்பு பூஜை

தெலுங்கு வருட பிறப்பு : கோவில்களில் சிறப்பு பூஜை

ஊத்துக்கோட்டை: தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தமிழகத்தில், தமிழர்கள் மட்டுமின்றி, அதிகளவில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் வசிக்கின்றனர். நேற்று, தெலுங்கு வருட பிறப்பையொட்டி, தெலுங்கு மொழி பேசுபவர்கள் குடும்பத்துடன் கோவிலில் சென்று தரிசனம் செய்தனர். தமிழக- - ஆந்திர எல்லையில், ஊத்துக்கோட்டையில் அதிகளவில் தெலுங்கு மொழி பேசும் மக்கள், காலையில் குளித்து முடித்து, குடும்பத்துடன், சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் வழிபட்டனர். நேற்று, வால்மிகீஸ்வரர், அன்னை மரகதாம்பிகை உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !