மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் நலத்திட்ட உதவிகள்
ADDED :2794 days ago
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேல்மலையனுார் தாலுகா, அவலுார்பேட்டை மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், அடிகளாரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மன்ற பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், வேளாண் கருவி, மாணவர்களுக்கு நோட்டு, பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் சரவணன், ரவிச்சந்திரன், வெண்ணிலா, மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.