உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் உழவாரப் பணி துவக்கம்

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் உழவாரப் பணி துவக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் ஒன்று. தொல்பொருள் ஆய்வுத்துறையின் பராமரிப்பில் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசிப்பதும் வழக்கம். ஜனவரி 4ம் தேதி துவங்கவுள்ள வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பெருமாள் கோவிலில் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் காயத்ரிதேவி தலைமையில் மாணவிகள் 80 பேர் உழவாரப் பணிகளில் ஈடுபட்டனர். கோவில் உள் பிரகாரம் மற்றும் வெளி பிரகாரங்களில் நிறைந்துகிடந்த குப்பைகள் மற்றும் செடிகளை அகற்றினர். மண்டபங்களில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !