உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குற்றாலம் கோயில் தேர்களுக்கு ரூ.12.50 லட்சத்தில் இரும்பு சக்கரம்

குற்றாலம் கோயில் தேர்களுக்கு ரூ.12.50 லட்சத்தில் இரும்பு சக்கரம்

குற்றாலம்:குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயில் தேர்களுக்கு ரூ.12.50 லட்சம் செலவில் புதிய இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டது.
குற்றாலநாதர் - குழல்வாய்மொழியம்பாள் கோயில் சிறப்பு வாய்ந்த புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் கடந்த 10 ஆண்டுகளாக தேர் பழுதடைந்த காரணத்தால் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இக்கோயிலுக்கு மொத்தம் 5 தேர்கள் உள்ளது. பழுதடைந்த தேர்களை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கோயில் நிர்வாக அதிகாரியாக பதவியேற்ற சுகுமாரன், துணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி ஆகியோரின் தீவிர முயற்சியின் பேரில் பழுதடைந்த 3 தேர்களுக்கு திருச்சி பெல் நிறுவனத்தின் மூலம் அரசு நிதி ரூ.12.50 லட்சத்தில் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டது.பராமரிப்பு செய்த தேர்களை நிர்வாக அதிகாரி சுகுமாரன், பொறியாளர் பெரியசாமி மற்றும் துணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி பார்வையிட்டனர். இத்தேர்களில் நாளை (3ம் தேதி) சுவாமி வீதிஉலா வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !