உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாளை., ராஜகோபால சுவாமி கோயிலில்ஸ்ரீ மத் பாகவத உபன்யாசம் இன்று துவக்கம்

பாளை., ராஜகோபால சுவாமி கோயிலில்ஸ்ரீ மத் பாகவத உபன்யாசம் இன்று துவக்கம்

திருநெல்வேலி:பாளை., ராஜகோபால சுவாமி கோயிலில் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் இன்று (2ம் தேதி) துவங்குகிறது.பாளை., ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று (2ம் தேதி) முதல் வரும் 8ம் தேதி வரை ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் நடக்கிறது. உபன்யாசத்தை கிருஷ்ண பிரம்மம் ஆய்குடி சுப்பிரமணிய சாஸ்திரிகள் குமாரர் ஓய்வு பெற்ற பொறியாளர் வைத்யநாத சர்மா நிகழ்த்துகிறார்.பாகவத மகாத்மியம், சோகர்ணோ பாக்யானம், பீஷ்ம ஸ்துதி, லோக சிருஷ்டி, வராக அவதாரம், கபிலர் அவதாரம், துருவ சரிதம், ரிஷப தேவ சரிதம், ஜடபரதர் சரிதம், ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், ருக்மணி கல்யாணம், கஜேந்திர மோட்சம் உள்ளிட்ட தலைப்புகளில் பேசுகிறார். ஏற்பாடுகளை நித்ய ஆராதன கைங்கர்ய சபா நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !