உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா: இன்று நோன்பு சாட்டுதல்

உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா: இன்று நோன்பு சாட்டுதல்

உடுமலை : உடுமலை, மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நோன்பு சாட்டுதல், இன்று மாலை நடக்கிறது.உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் தேரோட்டத் திருவிழா இன்று முதல் துவங்குகிறது. இன்று மாலை, 4:30 மணிக்கு, மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு நோன்பு சாட்டப்படுகிறது. வரும் 27ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, கம்பம் நடுதல் நடக்கிறது. திருவிழாவுக்கு தயாராகும் வகையில், திருத்தேர், கூடத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு பராமரிப்பு பணிகளும் துவங்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !