உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாக வைபவம்

கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாக வைபவம்

பொன்பதிர்கூடம்: சதுர்புஜ கோதண்டராமர் கோவிலில், சுவாமிக்கு, புஷ்ப யாக வைபவம் நடந்தது. திருக்கழுக்குன்றம் அடுத்த பொன்பதிர்கூடத்தில், சதுர்புஜ கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், 10 நாள் விழாவாக நடத்தப்படும், பிரம்மோற்சவம், 16ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி, காலை, மாலை நேரத்தில், சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. மூன்றாம் நாளான நேற்று முன்தினம், மல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, தவனம், மருகு, ரோஜா, செண்பகப்பூ, தாமரை, துளசி ஆகிய மலர்களால், புஷ்ப யாக வைபவம் நடந்தது. சென்னை, செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில்இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !