உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்ம வாகனத்தில் வேம்புலி அம்மன் உலா

சிம்ம வாகனத்தில் வேம்புலி அம்மன் உலா

திருவள்ளூர்: திருவள்ளூர், வேம்புலி அம்மன் கோவிலில், வசந்த நவராத்திரி முதலாம் ஆண்டு உற்சவம், 18ம் தேதி, காலை, அபிஷேகத்துடன் துவங்கியது. மாலை, மகா தீபாராதனை நடந்தது. முதல் நாளன்று இரவு, அம்மன், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். நேற்று, அன்ன வாகனத்தில் எழுந்தருளிய அம்மன், இன்று மாலை, கிளி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், 26ம் தேதி வரை, தொடர்ந்து ஒன்பது நாட்களிலும், அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருள உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !