திருப்பதியில் நால்வர்
ADDED :2799 days ago
திருப்பதி வெங்கடேசப்பெருமாள் கோயிலில் போகசீனிவாசர், கொலுவு சீனிவாசர், மலையப்பர், உக்கிர சீனிவாசர் என நான்கு உற்ஸவர்கள் உள்ளனர். மூலவரின் திருவடியில் இருப்பவர் போகசீனிவாசர். இவருக்கு பள்ளியறை பூஜை நடத்தப்படும். தினமும் காலையில் பஞ்சாங்கம் கேட்பவர் கொலுவு சீனிவாசர். பங்காரு வாசல் என்னும் தங்கவாசல் முன் இவர் இருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் விழா காலத்தில் வீதியுலா வருபவர் மலையப்பர். இவரை ‘உற்ஸவர் சீனிவாசர்’ என சொல்வர். கார்த்திகை மாத ஏகாதசி மட்டும் சூரிய உதயத்திற்குள் பவனி வருபவர் உக்கிர சீனிவாசர்.