எல்லைப்பிடாரி கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா
ADDED :2795 days ago
சேலம்: பங்குனி திருவிழாவையொட்டி, சேலம், குமாரசாமிப்பட்டியிலுள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், முகூர்த்தக்கால் நடும் விழா, நேற்று நடந்தது. தொடர்ந்து, சிறப்பு யாகம் நடந்தது. விழாக்குழு தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். வரும், 27ல் பூச்சாட்டுதல், ஏப்., 3ல் மாவிளக்கு, 4ல் பொங்கல் வைபவம், 5ல் அக்னிகுண்டம் இறங்குதல், 6ல் பால்குட ஊர்வலம், 7ல் சத்தாபரணம், ஏப்., 8ல் மஞ்சள் நீர் ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.