கடவுளின் வாகனங்கள் ஆழ்வார்பேட்டையில் கண்காட்சி
சென்னை: மயிலை கபாலீஸ்வரர் பங்குனி விழாவை முன்னிட்டு, கடவுளின் வாகனங்கள் என்ற தலைப்பிலான கண்காட்சி, சி.பி.ஆர்ட்., மையத்தில் நேற்று துவங்கியது. மயிலாப்பூர் உள்ளிட்ட கோவில்களில், பங்குனி பெருவிழா துவங்கிஉள்ளது. இந்நிலையில், இறைவனின் வாகனங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், இந்த கண்காட்சி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மயிலாப்பூரில் பங்குனி மாத பெருவிழா, 10 நாட்களுக்கு உற்சவமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் எழுந்தருளி, இறைவன் அருள்பாலிப்பார். இவற்றின், மகத்துவத்தை உணர்த்தும் வகையிலான அரிய கண்காட்சி, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, சி.பி.ஆர்ட்., மையத்தில் நேற்று துவங்கியது. கண்காட்சியில் சூரிய, சந்திர பிரபை, அதிகார நந்தி, கிளி, அன்னம், சிங்கம், புலி, காமதேனு, நாகம், ஆடு, ரிஷபம், மயில், யானை உள்ளிட்ட வாகனங்களின் மாதிரி வைக்கப்பட்டுள்ளன. அந்தந்த வாகனங்கள் குறித்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.