பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேர் விழா கொடியேற்றம்
பேரூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றம், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 6:30 மணிக்கு, பட்டிவிநாயகர் கோவிலில் இருந்து புற்று மண் எடுத்து வரப்பட்டு, கொடிமரத்தடியில் ரிஷப காட்சி நடந்தது. பின்னர், முளைப்பாரியில் நவதானியமிட்டு, ரஷாபந்தன் பூஜையும், இரவு, 7:00 மணிக்கு பட்டீஸ்வரர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு ரஷாபந்தன் செய்யப்பட்டது. தொடர்ந்து, காலை, 9:00 மணி ரிஷபவாகனக்கொடி ஏற்றப்பட்டது; கொடிமரத்துக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. மாலை 5:30 மணிக்கு யாகசாலை பூஜை நிறைவடைந்து, 6:00 மணிக்கு அதிமூர்க்கம்மன் திருத்தேர் வீதியுலா நடந்தது; திராளா பக்தர்கள் கலந்து கொண்டனர்.