உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருப்பணி துவக்கம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருப்பணி துவக்கம்

புதுச்சேரி : உருளையன்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருப்பணி துவங்கியுள்ளது. உருளையன்பேட்டை, சஞ்சய்காந்தி நகரில் எழுந்தருளி உள்ள வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியசுவாமி கோவிலை புதுப்பித்து திருப்பணிகள் செய்ய இருப்பதால், விநயாகர், துர்க்கை, மாரியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு பாலாலயம் ஸ்தாபிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.கோவில் தனி அலுவலர் சீனு மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். சிவா எம்.எல்.ஏ., கோவில் திருப்பணியினை, பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கோவில் அறங்காவல் குழு நிர்வாகிகள் பொன்னுசாமி, முத்துசாமி, சந்திரன், ரவி, ஜெயபால், கோபால், குப்புசாமி, ஜெயக்குமார், கண்ணன், ருத்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !