தி.மலை அண்ணாமலையார் கோயில் யானை ருக்கு உயிரிழந்தது: பக்தர்கள் அதிர்ச்சி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் கடந்த 23 ஆண்டுகளாக ஆன்மீக பணியாற்றிய 30 வயதான "ருக்கு" என்று பெயரிடப்பட்ட பெண் யானை உடல் நலக்குறைவு காரணமாக, இன்று அதிகாலை 2.30 மணியளவில் கோயிலில் உயிரிழந்தது.
பெண் யானை கடந்த 23 ஆண்டுகளாக கோவிலில் சேவைகள் செய்து வந்தது. கோயிலின் முக்கிய திருவிழாக்கள், உற்சவங்களில் ருக்கு தொடர்ந்து பங்கேற்று வந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு கோயிலின் நந்தவன மண்டபத்தில் தங்க வைப்பதற்காக கொண்டு சென்றிருக்கிறார்கள் அப்போது. அந்த இடத்தில் நாயும், குரங்கும் சண்டையிட்டு கொண்டிருந்திருக்கிறது. அதை பார்த்து அச்சமடைந்த ருக்கு வேகமாக ஓடி, இரும்புச் சுவறில் மோதி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடல் நலம் குன்றிய ருக்கு, இன்று இரவு 2.30 மணியளவில் கோயிலில் உயிரிழந்தது. யானை உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடை சோகத்தை ஏற்ப்படுத்துயுள்ளது.
புத்துணர்வு முகாம் சென்றிருந்த யானை ருக்கு, நேற்று கடந்த பிப்., 21ல்,அதிகாலை கோவிலுக்கு திரும்பியது. புத்துணர்வு முகாமிற்கு செல்லும்முன், யானை ருக்கு, 5,000 கிலோ எடையில் இருந்தது. தற்போது, 15 கிலோ கூடி, 5,015 கிலோவாக வந்தது. இந்த யானை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கோயிலுக்கு வழங்கியதாகும்.