உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வரை மேற்கூரை அமைக்க ரூ.1 கோடி நிதி!

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வரை மேற்கூரை அமைக்க ரூ.1 கோடி நிதி!

திருச்சி: ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் முதல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம் வரை மேற்கூரை அமைக்க ஒரு கோடி ரூபாய்கான காசோலையை மாவட்ட சுற்றுலா அலுவலர், கலெக்டரிடம் வழங்கினார். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடிப்பெருக்கு, மார்கழி மாதம், அமாவாசை தினம் மற்றும் திருவிழாக் காலங்களில் காவிரிக்கரையில் உள்ள அம்மாமண்டபம் பகுதியில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, காவிரி ஆற்றில் நீராடி விட்டு, ராஜகோபுரம் வரை நடந்து செல்வர். பக்தர்கள் வெயில், மழைக்காலங்களில் சிரமமின்றி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வசதியாக காவரி ஆற்றின் கரையிலுள்ள அம்மாமண்டபத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோவில் வரை நடைபாதையில் மேற்கூரை அமைக்க சுற்றுலாத்துறையின் மூலம் கருத்துரு பெற்று, கலெக்டரால் தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி முதல்வர் ஜெயலலிதா, மேற்கூரை அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான காசோலையை மாவட்ட சுற்றுலா அலுவலர் தண்டபானி, கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !