உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆழ்வார்குறிச்சி பெருமாள் கோயிலில் 5ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா!

ஆழ்வார்குறிச்சி பெருமாள் கோயிலில் 5ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா!

ஆழ்வார்குறிச்சி :ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் வரும் 5ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா நடக்கிறது. மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பெருமாள் கோயில்களில் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆழ்வார்குறிச்சி கீழகிராமத்தில் வேங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பெருமாள், சீதாதேவி, பூமாதேவி, கருடர், ஆஞ்சநேயர், நரசிம்மமூர்த்தி உட்பட பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். வரும் 5ம் தேதி வைகுண்ட ஏகாதசி நாளன்று அதிகாலை சிறப்பு பஜனை, பெருமாள் சீதாதேவி, பூமாதேவியருடன் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடக்கிறது. பின்னர் கும்ப ஜெபம், வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடக்கிறது. மாலையில் நாக வாகனத்தில் பெருமாள் சீதா, பூமாதேவியருடன் எழுந்தருளலும், வீதியுலாவும், பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனை, விசேஷ தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை கட்டளைதாரர் ஆழ்வார்குறிச்சி எஸ்.டி.சி.கிளை துவக்கப்பள்ளி பணிநிறைவு தலைமையாசிரியர் உலகநாதன் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !