உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமந்தராயசுவாமி கோவிலில் பங்குனி சனிக்கிழமை விழா

அனுமந்தராயசுவாமி கோவிலில் பங்குனி சனிக்கிழமை விழா

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே மருதுாரில் உள்ள, அனுமந்தராயசுவாமி கோவிலில், பங்குனி தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை விழா நடந்தது. காலை, 10:00 மணிக்கு தமிழாசிரியர் அரங்கசாமியின் வில்லி பாரதம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அதைத் தொடர்ந்து முத்துக்கல்லுார் மற்றும் சுற்றுப்பகுதி பஜனைக் குழுவினரின், பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. பிறகு அன்ன தானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை, ஆஞ்சநேயா அறக் கட்டளை அமைப்பினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !