கரூர் பசுபதீஸ்வரர் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :2800 days ago
கரூர்: பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் நடந்தது. கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வரும், 30ல், பங்குனி தேரோட்டம் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, நேற்று கோவிலில் உள்ள கொடி மரத்தில், உற்சவருக்கு முன் கொடிமரத்திற்கு அபி?ஷகம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தி கொடியேற்றம் நடந்தது.தினமும் உற்சவர் வீதி உலா நடக்கிறது. வரும், 28 காலை, 9:00 மணியளவில் கல்யாணபசுபதீஸ்வரருடன் அலங்காரவல்லி, சவுந்திரநாயகி அம்மனுடன் திருக்கல்யாணம் நடைபெறும். 30 காலை, 7:00 மணியளவில் சுவாமி அம்பாள் திருத்தேரில், பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தல் நடக்கிறது. ஏப்., 3ல், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்த பின், விழா நிறைவு பெறுகிறது.