தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர திருவிழா
மதுரை:மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 25 முதல் 31 வரை நடக்கிறது.நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள் கூறியதாவது: மார்ச் 25ல் அதிகாலை 5:00 மணிக்கு ஸ்கந்த ேஹாமம், ருத்ர ஜெபம், தங்கக்கவச சாத்துப்படி, மாலை 4:00 மணிக்கு பூக்கூடாரம், சந்தனக்காப்பு அலங்காரம், மாலை 6:00 மணிக்கு 216 திருவிளக்கு பூஜை. மார்ச் 27 ல் காலை 6:00 மணிக்கு பால்குடம், காவடி ஆட்டம் நடக்கிறது. மார்ச் 30 ல் அதிகாலை 5:00 மணிக்கு ஸ்கந்த ேஹாமம், தங்கக்கவச சாத்துபடி, இரவு 7:00 மணிக்கு இம்மையில் நன்மை தருவார் கோயில் திருப்புகழ் சபை குழுவினரின் திருப்புகழ், தேவாரம் பாராயணங்களுடன் உற்ஸவ மூர்த்தி மாசி வீதிகளில் உலா, பூப்பல்லக்கு நடக்கிறது. மார்ச் 31ல் காலை 10:00 மணிக்கு அன்னதானம். மண்டல இணை கமிஷனர் பச்சையப்பன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., கலந்து கொள்கின்றனர், என்றார்.