உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவேங்கடமுடையான் கோயில் கும்பாபிேஷக விழா தொடக்கம்

திருவேங்கடமுடையான் கோயில் கும்பாபிேஷக விழா தொடக்கம்

காரைக்குடி:அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் கும்பாபிேஷக விழா நேற்று தொடங்கியது. காலை 8:30 மணி முதல் 12:30 மணிக்குள் அனுக்கை, மகா சங்கல்பம், வாஸ்துசாந்தி நடந்தது. மாலை 5:30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.

அரியக்குடி ஸ்ரீனிவாச பெருமாள் அறப்பணிக்குழு, அலர்மேல் மங்கை தாயார் அறப்பணிக்குழு தலைவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் கூறும்போது: தென் திருப்பதி என அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் திருக்கோயில் 17-ம் நுாற்றாண்டை சேர்ந்தது. 19 ஆண்டுக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் இப்பகுதி மக்கள், நகரத்தார், நாட்டார்களின் ஆதரவோடு, ரூ.3 கோடியில் கோயிலின் சொர்க்கவாசல், தசாவதார மண்டபம், பெரிய ராஜகோபுரம், ரிஷி கோபுரம் மற்றைய ஆறு கோபுரங்கள், ஆறு கர்ப்ப கிரகங்கள், மண்டபங்கள் ஆகிய பகுதிகள் செப்பனிட்டு, புதுப்பொலிவு கூட்டும் வர்ணம் பூசப்பட்டுள்ளது.ரூ.45 லட்சத்தில் புதிய அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அனைத்து விமான ஸம்ப்ரோக்ஷனம், அனைத்து ராஜகோபுரங்கள் ஸம்ப்ரோக்ஷனம் வருகிற 26-ம் தேதி காலை 6:18 மணி முதல் 7:18 மணிக்குள் நடக்கிறது. இரண்டு அறப்பணி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு அறக்கட்டளை மூலம் அன்னதானம், ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும், மற்றொரு அறப்பணிக்குழு மூலம் கோயில் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும். நன்கொடைகளுக்கு வருமான வரித்துறையின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, என்றார். உடன் அறப்பணிக்குழு செயலாளர் ராம.சா.நாச்சியப்பன், பொருளாளர் ராம.சா.சிதம்பரம் மற்றும் அறப்பணிக்குழுவினர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !