உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி கோயிலில் தடயவியல் இயக்குனர் விசாரணை

மீனாட்சி கோயிலில் தடயவியல் இயக்குனர் விசாரணை

 மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து நடந்த இடத்தில் தடயவியல் இயக்குனர் திருநாவுக்கரசு தலைமையிலான அதிகாரிகள் நேற்று விசாரணையை துவக்கினர்.இங்குள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் பிப்.,2 இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 35 கடைகள் சேதமுற்றன. பொதுப்பணித்துறை ஓய்வு முதன்மை பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 12 பேர் கொண்ட விசாரணை குழு நேற்றுமுன்தினம் 3ம் கட்டமாக விசாரணை நடத்தியது.கட்டட துாண்கள் மேலும் பாதிக்காமல் இருக்க ஐ.ஐ.டி., இன்ஜினியர்கள் ஆலோசனைபடி மண்டப துாண்களை பாதுகாக்க இரும்பு கர்டர் அமைத்துள்ளனர். சென்னை தடயவியல் துறை இயக்குனர் திருநாவுக்கரசு, உதவி இயக்குனர் பாஸ்கரன் தீ விபத்து நடந்த இடத்தில் நேற்று விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.திருநாவுக்கரசு கூறியதாவது: தீ விபத்து நடந்த இடத்தில் ஆதாரம் திரட்ட சில நாட்கள் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. உரிய ஆதாரத்தை திரட்டி அரசுக்கு அறிக்கை வழங்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !