கொடுமுடி மலையம்மன் கோவிலில் 28ல் தேரோட்டம்
ADDED :2800 days ago
கொடுமுடி: கொடுமுடி, மலையம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 20ல் துவங்கியது. வரும், 27 வரை, அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும், 28ல் காலை, 6:00 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். காலை, 9:00 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது. இதை தொடர்ந்து பொங்கல் வைபவம் நடக்கிறது. 29ல், கருப்பணசுவாமிக்கு பொங்கல் வைத்தல், வேல் ஊர்வலம், 30ல், விடையாற்றி உற்சவம், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியுடன், தேர்த்திருவிழா நிறைவடைகிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தினமும் காலை, மாலைகளில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.