மழை வளம் வேண்டி மரங்களுக்கு திருமணம
அனுப்பர்பாளையம்,:மழை வளம் வேண்டி, அரசு மற்றும் வேம்பு மரத்துக்கு இன்று திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நடக்கிறது.திருப்பூரை அடுத்த காவிலிபாளையம் புதுாரில் உள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் மற்றும் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடந்தது.கோவிலின் மண்டலாபிேஷக பூஜை நாளை நிறைவடைகிறது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு மற்றும் வேம்பு மரங்களுக்கு திருமணம் செய்யும் நிகழ்வு இன்று நடக்கிறது. இன்று காலை 7:30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க பஞ்ச வாத்தியத்துடன் அரசு - வேம்பு மரங்களுக்கு திருமணம் நடக்கிறது. உற்சவத்தில் பக்தர்களின் சீர் வரிசை, பட்டு வஸ்திரங்களுடன் மேளதாளங்களுடன் பூஜை வழிபாடுகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து, 10:00 மணிக்கு 108 சங்கு பூஜையும், சங்காபிஷேகமும் மதியம் 1:00 மணிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. கோவில் நிர்வாகிகள் கூறுகையில், நன்றாக மழை பெய்ய வேண்டியும், உலக அமைதிக்காகவும், அரசு, வேம்பு மரங்களுக்கு திருமணம் செய்யும் பூஜை யை நடத்துகிறோம், என்றனர்.