உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோவிலில் மண்டல அபிேஷக நிறைவு விழா

வரசித்தி விநாயகர் கோவிலில் மண்டல அபிேஷக நிறைவு விழா

திருப்பூர்; வரசித்தி விநாயகர் கோவிலில், மண்டலாபிேஷக நிறைவையொட்டி, 108 சங்காபிேஷக பூஜை வழிபாடுகள் நேற்று நடைபெற்றன.திருப்பூர், கோர்ட் வீதி - வாலிபாளையம் சந்திப்பில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் கடந்த மாதம், 25ம் தேதி நடந்தது. தொடர்ந்து, 12 நாட்கள் மண்டல பூஜை காலை மற்றும் மாலையில் நடந்து வந்தது. இதன், நிறைவு விழா நேற்று நடந்தது. அதையொட்டி, லிங்க வடிவில், 108 சங்கு அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜை, ேஹாமம் நடந்தன. மேலும், வரசித்தி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, கலச பூஜை நடந்தது. அதன்பின், மகா கணபதி ேஹாமம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !