உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மருவத்தூர் கோவிலுக்கு வால்பாறை பக்தர்கள் பயணம்!

மேல்மருவத்தூர் கோவிலுக்கு வால்பாறை பக்தர்கள் பயணம்!

வால்பாறை : வால்பாறையிலிருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்கள் இருமுடி கட்டி ஊர்வலமாக புறப்பட்டனர்.வால்பாறை கக்கன் காலனியில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றத்தின் சார்பில் 420 பக்தர்கள் கடந்த வாரம் சக்தி மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். நேற்று காலை பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் கக்கன்காலனியில் உள்ள வார வழிபாட்டு மன்றத்தில் இருமுடி கட்டி ஊர்வலமாக புறப்பட்டனர். மன்ற தலைவர் முத்துமாரிதங்கம் தலைமை வகித்தார். ஊர்வலத்தை நகராட்சித்தலைவர் சத்தியவாணிமுத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் புதுமார்க்கெட், போஸ்ட் ஆபீஸ், சுப்பிரமணிய சுவாமி கோவில் வீதி, பழைய பஸ் ஸ்டாண்டு, காந்திசிலை, ஸ்டேன்மோர் சந்திப்பு வழியாக புதிய பஸ் ஸ்டாண்டு சென்று அங்கிருந்து கோவிலுக்கு பஸ்சில் புறப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !