உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் காரமடை அம்சிகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மேட்டுப்பாளையம் காரமடை அம்சிகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மேட்டுப்பாளையம் : காரமடை - சிறுமுகை ரோட்டில் சாஸ்திரி நகரில், 460 ஆண்டுகள் பழமையான அம்சிகாளியம்மன் கோவில் உள்ளது.

கோவிலுக்கு புதிதாக கருவறை, கோபுரம், முன் மண்டபம், குதிரைகளுக்கு சன்னதி, கருப்ப ராய சுவாமிக்கு தனி சன்னதி ஆகியவை அமைக்கப்பட்டது.இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவக்கிரஹ பூஜையுடன் துவங்கியது.

இரண்டாம் நாள் காலை, தீர்த்தக்குடங்களையும், முளைப்பாரியை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து மூன்று கால யாக பூஜைகள் நடந்தன. கோபுர கலசங்கள் அமைத்து, சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்தனர்.நான்காம் நாள் காலையில் யாக பூஜை களும், அம்சிகாளியம்மன், கருப்பராயசுவாமிக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பவானி சாகர் வீரபத்தர சோமேஸ்வர சுவாமி கோவில் அர்ச் சகர் சோமசேகர சிவாச்சாரியார், கவுரிசங்கர் சிவம் ஆகியோர் கும்பாபிேஷகத்தை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !