உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் நேச நாயனார் குருபூஜை சிவனடியார்கள் வழிபாடு

திருப்பூர் நேச நாயனார் குருபூஜை சிவனடியார்கள் வழிபாடு

திருப்பூர் : பங்குனி மாதம், ரோகினி நட்சத்திர தினமான (மார்ச் 23), திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், எம்பிரான் நேச நாயனார் குருபூஜை நடைபெற்றது.

திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 64 நாயன்மார்கள் சிலை அமைக்கப்பட்டு, நாயன்மார் குருபூஜை நடந்து வருகிறது. அர்த்த சாமபூஜை அடியார் திருக்கூட்டத்தினர், இதனை நடத்தி வருகின்றனர்.(மார்ச் 23), பங்குனி மாத, ரோகினி நட்சத்திர தினமான எம்பிரான் நேசநாயனார் குருபூஜை நடந்தது. காம்பீலி என்ற ஊரில், அறுவையார் குலத்தில், செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர் நேசர். இவர், சிவனடியாருக்கு தொண்டு செல்வதையே வாழ்க்கையாக நினைந்து வாழ்ந்தார்.குடும்ப தொழிலாக கைத்தறி நெசவு இருந்ததால், சிவனடியாருக்கு உடைகள், கோவணம் நெய்து கொடுக்கும் சேவையை செய்து வந்தார். இடைவிடாத சிவபக்தியால், நாயன்மாராக போற்றும் அந்தஸ்தை பெற்று, சிவனடி சேர்ந் தார்.அவரது குருபூஜை விழா நேற்று, விஸ்வேஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடந்தது. அர்த்தசாம பூஜை சிவனடியார் திருக்கூட்ட பக்தர்கள், எம்பிரான் நேச நாயனாருக்கு, அபிஷேக ஆராதனை செய்து, பன்னிரு திருமுறை பாராயணம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !